Thursday, April 28, 2011

கடவுள்


இருக்கிறாரா? இல்லையா?  இதுவல்ல எனது பதிவு. எப்படி எல்லாம் அவர் இருக்க கூடாது என்பதே இது. 


நாங்கள் விரும்பும் கடவுள்,






  1. இரத்த பலி என்ற பெயரில் உயிர்களை  வதைக்க கூடாது.
  2. கடவுளின் பிறப்பு ஒரு ஆபாசமான கதையாக இருக்க கூடாது.
  3. கடவுளுக்கு ஒரு உருவம் இருக்க கூடாது.
  4. அறிவியல் உண்மைகளுக்கு புறம்பாக இருக்க கூடாது.
  5. கேள்வி கேட்போரை துன்புறுத்த கூடாது.
  6. பொய் சம்பிரதாயங்களை உருவாக்க கூடியவராக இருக்க கூடாது.
  7. அவர் பெயரால் சாதிய ஏற்ற தாழ்வுகளை உருவாக்க கூடாது.
  8. பெண்களை போதை பொருளாகவும், அடிமைகளாகவும் மாற்ற கூடியதாக இருக்க கூடாது.
  9. மனிதனின் சாதாரண ஆசைகளையும், புலன்களின் ஆசைகளையும் அடக்க கூடியதாக இருக்க கூடாது.
  10. உண்மையயை பொய்யாக மாற்ற கூடாது.
  11. பொய் அடையாளங்கள்  மூலம் நம்ப செய்வதாக இருக்க கூடாது.
  12. வெறும் பணத்திற்காக, உண்டியலுக்காக இருக்க கூடாது.
  13. ஆபாச செயல்கள் புரிந்து ஆள்பவராக இருக்க கூடாது.
  14. புரிந்து கொள்ள முடியாதவராக இருக்க கூடாது.
  15. சகோதரத்துவம்,அன்பு, மன்னிப்பு இல்லாதவராக இருக்க கூடாது.
  16.   மத சகிப்புத்தன்மை இல்லாதவராக இருக்க கூடாது.

Friday, April 22, 2011

பேருந்து வசதிகள்

தூத்துக்குடியில்  இருந்து 

நேரம்
வண்டி எண்/பெயர்
 புறப்படும் இடம் 
 பெயர்பலகை 
5.30AM
53 C
 ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
6.30AM
53 B
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
6.40AM
விஜயலட்சுமி 
பு.பேருந்து நிலையம் 
சாயல்குடி
8.20AM
 மயில்வாகனன் 
பு.பேருந்து நிலையம் 
முதுகுளத்தூர் 
8.30AM
53 C
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
9.45AM
175 X
பு.பேருந்து நிலையம் 
ராமேஸ்வரம் 
11.00AM
53 C
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
12.30PM
விஜயலட்சுமி 
பு.பேருந்து நிலையம் 
சாயல்குடி
12.40PM
53 B
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
2.15PM
53 C
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
3.30PM
53 B
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
5.30PM
53 C
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
5.50PM
 மயில்வாகனன் 
பு.பேருந்து நிலையம் 
முதுகுளத்தூர் 
6.00PM
53 B
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
6.20PM
விஜயலட்சுமி 
பு.பேருந்து நிலையம் 
சாயல்குடி
7.00PM
175 X
பு.பேருந்து நிலையம் 
ராமேஸ்வரம் 
7.45PM
53 C
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  
9.30PM
53 B
ப.பேருந்து நிலையம் 
கீழவைப்பார்  

Thursday, April 21, 2011

ஆடம்பரம்:

கேளுங்கள் இதை பற்றி.ஊர் திருவிழாவை  பார்த்திருக்கிறீர்கள? எத்தனை அலங்காரம்? பத்து நாள் திருவிழாவிற்கு  இரண்டு லட்சம் செலவு.



ஆலயம் செப்பனிட இரண்டு லட்சம் செலவு. ஏன்?  நாம் கல்விக்கோ, மக்களுக்கோ, பொது பிரச்சனைக்கோ ஏன் இதனை செலவு செய்ய வில்லை?  இயேசு "என் தந்தையின் வீடு ஜெப வீடு. ஏன் நீங்கள் இதை வியாபார கூடமாக ஆக்குகிறீர்கள்? என்று சாட்டையால் விரட்டினார். நம் புளியம்பட்டி, வேளாங்கண்ணி எப்படி இருக்கிறது? பக்தி எங்கே?
வெறும் வியாபாரம் மட்டுமே. 

பாதுகாப்பு கலை:


எங்கள் ஊரில் ஒரு நல்ல பழக்கம் ஒன்று உண்டு. குறைந்த பட்சம் எல்லோரும் சிலம்பம் கற்று வைத்திருப்பது. ஊரில் யாரோடைய திருமணமாக இருந்தாலும் சிலம்பம் சுற்றுவது கண்டிப்பாக இருக்கும். இல்லாவிட்டால் பெரிய குறையாக தெரியும். என் நண்பர் ஒருவரின் ஷோ. 




ஊரின் முக்கியமான இடங்கள்/சங்கங்கள்:


புனித வியாகுல அன்னை ஆலயம்.
பங்கு தந்தை இல்லம். 
புனித தெரசால் நடுநிலை பள்ளி.
வியாகுல அன்னை சகோதிரிகளின் கான்வென்ட்.
நர்சரி பள்ளி.
சத்துணவு கூடம்.
ரேசன் கடை.
தபால் அலுவலகம்.
TMSSS
ஊர் கமிட்டி ( தலைவர் - சகாயம் பர்னாந்து  ) 
மீனவர் நல சங்கம்.       ( தலைவர் - நசரேன் கோமேஸ் )
இளைஞர் சங்கம்.          ( தலைவர் - நிக்சன் )
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்.
மருத்துவமனை - சில பத்து அடி தூரத்தில். 
புனித லூயிஸ் உயர் நிலை பள்ளி - சில பத்து அடி தூரத்தில். 

தீவு

எங்கள் ஊருக்கு மிக அருகமையில் உள்ளது கரை சல்லி தீவு. கடற்கரையில் இருந்து அரைமணி நேர பயணத்தில் செல்லலாம். இதன் அழகுக்கு ஈடு எதுவுமில்லை. யாருமற்ற நிலபரப்பில் எங்கும் தண்ணீர். நல்ல அனுபவம் பெறலாம்.  சிறிது தூரம் கடலுக்குள் காலற நடக்கலாம். சுற்றி பவள பறைகளை பார்க்கலாம். தூய மண்ணில் உருண்டு விளையாடலாம். எங்கள் ஊருக்கு வரும் ஒவ்வொரு வீட்டு விருந்தினருக்கும் முதல் ஆசை தீவுக்கு செல்வதே.