Thursday, April 21, 2011

கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவம்

சமீபத்திய ஒரு நிகழ்வு. ஊரில் மிகவும் பக்தியுள்ள குடும்பம் . தாய் முழு நேரமும் ஆழ்ந்து ஜெபிப்பவர். எந்நேரமும் ஏசுவே என்று சொல்லுபவர். இளைய மகன் எனது நண்பர். ஒரு நாள் இரவில் டூ- வீலரில் விபத்து ஏற்பட்டு விட்டது என் நண்பனுக்கு. சிறிது லேசான காயங்கள்.விழுந்ததில் சிறு மனக்குழப்பம். எல்லோரும் ஊரில் அவனை பேய் அடித்து விட்டதாக கட்டி போட்டு விட்டனர். தாயும் கூட.இந்த கிறிஸ்தவ மக்கள் ஒரு காரியம் செய்தார்கள். எனது பக்கத்து ஊரில் ஒரு ஹிந்து சாமியாரிடம் குறி பார்த்தார்கள். அவர் சொல்லிய படியே நடந்தார்கள். இறுதியாக பேயை விரட்ட ஒரு சடங்கையே நடத்தி விட்டார்கள்.சம்பவங்கள்  அனைத்தும் ஒரு பத்து நாட்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. இந்த பத்து நாட்கள் இவர்கள் சர்ச்சுக்கு போகவோ, பாதரிடம் மந்திரிக்கவோ இல்லை. அவர்களுக்கு அந்த ஹிந்து சாமியாரிடம் நூறு சதவிகித நம்பிக்கை இருந்தது.


எங்கே கிறிஸ்து? எங்கே கிறித்தவம்?

இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இதைபோல் எங்கள் பகுதியில் இன்னும் எத்தனை எத்தனை. நான் ஒரு வழி சொல்லுகிறேன். பேசாமல் நமது ஆலயங்களை பூட்டி விட்டு, அனைத்து சொருபங்களையும் உடைத்து விட்டு அந்த சாமியாரை கூப்பிட்டு கோயில் கட்டுங்கள் .ஆம். சாத்தானை கூப்பிடுங்கள்.

கிறிஸ்துவை நம்பாத நாம் கிறிஸ்தவர்களா ? நானும் விதி விலக்கல்ல. நானும் இதை போன்று ஒரு முறை சாமியார்களால் பேய் விரட்டப்பட்டேன். படித்த முட்டாள் நான். பைபிளில் ஒரு வசனம். 
" இம்மக்கள் என்னை உதட்டினால் போற்றுகின்றனர். 
  இவர்கள் உள்ளமோ வெகு தொலைவில் இருக்கிறது"

No comments:

Post a Comment